கொலம்பியாவில் கடத்தல் கும்பலிடமிருந்து 42 அரிய வகை கடல் ஆமைகள் மீட்பு!

0 2703

கொலம்பியாவில் கடத்தல்காரர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட அரிய வகை கடல் ஆமைகள் மீண்டும் அவற்றின் வாழ்விடத்தில் விடப்பட்டன.

வட மாநிலமான La Guajira -வில் விலங்குகளை கடத்தும் கும்பலிடமிருந்து காப்பாற்றப்பட்ட 42 ஆமைகளில் 31 ஆமைகள் பத்திரமாக மீட்கப்பட்டன. 11 ஆமைகளை கடத்தல்காரர்கள் சரியாக கையாளாததால் அவை பரிதாபமாக உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடல் ஆமை இனத்தைச் சேர்ந்த கிட்டத்தட்ட எல்லா வகையான ஆமைகளும் அழியும் தருவாயில் இருப்பதாக WWF என்றழைக்கப்படும் World Wildlife Fund தெரிவித்துள்ளது.

 

 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments